1. ‘அழுது அடியடைந்த அன்பர்’ என்று அழைக்கப்படுபவர் யார்?
- A) திருநாவுக்கரசர்
- B) திருஞானசம்பந்தர்
- C) சுந்தரர்
- D) மாணிக்கவாசகர்
Answer:
D) மாணிக்கவாசகர்
2.‘உள்ளங்கை நெல்லிக்கனி போல’ உவமை வெளிப்படுத்தும் பொருள் என்ன?
A) வெளிப்படைத்தன்மை
B) எளிதில் மனதில் பதிதல்
C)பயனுள்ளது
D) பெருமை
Answer:
A) வெளிப்படைத்தன்மை
3‘திணைமாலை நூற்றைம்பது’ நூலின் ஆசிரியர் யார்?
- A) கணிமேதாவியார்
- B) கண்ணன் சேந்தனார்
- C) கண்ணன் கூத்தனார்
- D) காரியாசன்
Answer:
A) கணிமேதாவியார்
4. ‘வளி மிகின் வலி இல்லை’ என்று கூறியவர்?
- A) ஒளவையார்
- B) ஐயர் முடவனார்
- C) வெண்ணெய் குயத்தியார்
- D) மதுரை இளநாகனார்
Answer:
B) ஐயர் முடவனார்
5. “தமிழே மிகவும் பண்பட்ட மொழி” என்று பாராட்டியவர் யார்?
- A) மாக்சுமுல்லர்
- B) ஜி.யு. போப்
- C) கால்டுவெல்
- D) கமில்சுவலபில்
Answer:
A) மாக்சுமுல்லர்
6. உலகம் தோன்றிய போதே தோன்றிய தமிழை அதன் தொன்மையை கருதி ‘என்றுமுள தென்தமிழ்’ என்று கூறியவர்?
- A) திரு.வி.க
- B) பரிதிமாற் கலைஞர்
- C) மறைமலை அடிகள்
- D) கம்பர்
Answer:
D) கம்பர்
7. கணிமேதாவியாரின் காலம்?
- A) கி.பி.4ம் நூற்றாண்டு
- B) கி.பி.5ம் நூற்றாண்டு
- C) கி.பி.6ம் நூற்றாண்டு
- D) கி.பி.7ம் நூற்றாண்டு
Answer:
B) கி.பி.5ம் நூற்றாண்டு
8. இன்றைய மொழியில் வல்லுநர்கள் பேணி பின்பற்றத்தக்க வழிமுறைகளை தொல்காப்பியம் கூறுகின்றது என்றவர்?
- A) கெல்லட்
- B) மாக்சுமுல்லர்
- C) ஜி.யு.போப்
- D) முனைவர் எமினோ
Answer:
D) முனைவர் எமினோ
9. சூரியநாராயண சாஸ்திரியார்’ என்னும் பெயரைக் கொண்டவர் யார்?
- A) மறைமலை அடிகள்
- B) பாவலரேறு பெருஞ்சித்திரனார்
- C) பரிதிமாற் கலைஞர்
- D) தேவநேய பாவணர்
Answer:
C) பரிதிமாற் கலைஞர்
10. நடுவணரசு தமிழைச் செம்மொழியாக அறிவித்த ஆண்டு?
- A) 2000
- B) 2004
- C) 2005
- D) 2001
Answer:
B) 2004