1. "பல் பழப் பலவின் பயங்கெழு கொல்லி" என்ற வரி இடம் பெற்ற நூல்?
- A) புறநானூறு
- B) அகநானூறு
- C) நற்றிணை
- D) குறுந்தொகை
Answer:
B) அகநானூறு
2. ".................... தொல்லோர் சிறப்பின் விரிந்ததிர் கூடலும் இழந்த என்னை" இப்பாடல் வரிகள் இடம் பெற்ற நூல்?
- A) சிலப்பதிகாரம்
- B) கம்பராமாயணம்
- C) கலிங்கத்துபரணி
- D) புறநானூறு
Answer:
A) சிலப்பதிகாரம்
3. உலக காற்று நாள்?
- A) அக்டோபர் 03
- B) ஜூன் 15
- C) ஜூன் 5
- D) அக்டோபர் 16
Answer:
B) ஜூன் 15
4. விரிச்சி - பொருள் தருக
- A) நற்சொல்
- B) வன்சொல்
- C) தோள்
- D) கேட்டல்
Answer:
A) நற்சொல்
5. இலக்கணக்குறிப்பு தருக. கைதொழுது
- A) வினைத்தொகை
- B) மூன்றாம் வேற்றுமைத்தொகை
- C) உம்மைத்தொகை
- D) இரண்டாம் வேற்றுமைத்தொகை
Answer:
B) மூன்றாம் வேற்றுமைத்தொகை
6. ‘அடிகள் நீரே அருளுக’ என்ற கூற்றுக்கு இணங்க எழுந்த காப்பியம் எது?
- A) சிலப்பதிகாரம்
- B) மணிமேகலை
- C) கம்பராமாயணம்
- D) பெரியபுராணம்
Answer:
A) சிலப்பதிகாரம்
7. ‘அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்’ என்ற பாடல் வரிகள் இடம் பெற்ற நூல்?
- A) குறுந்தொகை
- B) கலிங்கத்துபரணி
- C) புறநானூறு
- D) நற்றிணை
Answer:
D) நற்றிணை
8. “யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் வள்ளுவர்போல் இளங்கோவைப்போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை; " எனப் புகழ்ந்தார் யார்?
- A) பாரதியார்
- B) பாரதிதாசன்
- C) கவிமணி
- D) நாமக்கல் கவிஞர்
Answer:
A) பாரதியார்
9. ‘தமிழ் இயக்கம்’ என்ற நூலின் ஆசிரியர்?
- A) பாரதியார்
- B) பாரதிதாசன்
- C) கவிமணி
- D) ராமலிங்கம் பிள்ளை
Answer:
B) பாரதிதாசன்
10. "குரல்உணங்கு விதைத் தினை உரல்வாய்ப் பெய்து சிறிது புறப்பட்டன்றோ இலள்" என்ற பாடல் வரிகள் இடம் பெற்ற நூல்?
- A) குறுந்தொகை
- B) சிறும்பணாற்றுப்படை
- C) புறநானூறு
- D) நற்றிணை
Answer:
C) புறநானூறு