1. "எடுத்தல் படுத்தல் நலிதல் உழப்பில் திரிபும் தத்தமில் சிறிது உள வாகும்” என்ற வரிகள் இடம் பெற்ற நூல்?
A) பிங்கள நிகண்டு
B) தொல்காப்பியம்
C) நன்னூல்
D) திவாகர நிகண்டு
Answer:
B) தொல்காப்பியம்
2. பொருத்துக a. குறில் எழுத்துக்களை குறிக்க - 1. கரம் b. நெடில் எழுத்துக்களை குறிக்க - 2. கான் c. குறில் நெடில் எழுத்துக்களைக் குறிக்க - 3. காரம் d. ஆயுத எழுத்தைக் குறிக்க - 4. கேனம்
A) 2 3 1 4
B) 1 2 3 4
C) 3 2 1 4
D) 4 3 2 1
Answer:
B) 1 2 3 4
3. கீழ்க்கண்டவற்றுள் குற்றியலுகரம் அல்லாதது எது?
A) காசு
B) பாட்டு
C) பந்து
D) அது
Answer:
D) அது
4. உடுமலை நாராயணகவி எவ்வாறு புகழப்படுவார்?
A) கவிஞாயிறு
B) பகுத்தறிவுக்கவிராயர்
C) பகுத்தறிவு பகலவன்
D) கவியரசர்
Answer:
B) பகுத்தறிவுக்கவிராயர்
5.உவமைக் கவிஞரின் இயற்பெயர் என்ன?
A) ராசகோபாலன்
B) ராஜேந்திரன்
C) ராதா கிருஷ்ணன்
D) சுரதா
Answer:
A) ராசகோபாலன்
6.கொல்லிப்பாவை என்னும் சிற்றிதழை நடத்தியவர் யார்?
A) ராஜ மார்த்தாண்டன்
B) ராஜம் கிருஷ்ணன்
C) அப்துல் காதர்
D) சுரதா
Answer:
A) ராஜ மார்த்தாண்டன்
7. குழந்தை வரைந்தது பறவைகளை மட்டுமே வானம் தானாக உருவானது. என்ற புதுக்கவிதை யாருடையது?
A) அம்சப்ரியா
B) கலாப்ரியா
C) சுரதா
D) ஷெரீப்
Answer:
B) கலாப்ரியா
8.ஆசிய யானைகளில் ஆண் பெண்களை வேறுபடுத்துவது?
A) காது
B) தந்தம்
C) கண்
D) கால்நகம்
Answer:
B) தந்தம்
9. பேச்சு மொழியை எவ்வாறு கூறுவர்?
A) இலக்கிய வழக்கு
B) உலக வழக்கு
C) நூல் வழக்கு
D) மொழி வழக்கு
Answer:
B) உலக வழக்கு
10.
1. 2012 ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் ஜாதவுக்கு 'இந்திய வனமகன் (Forest Man of India)' என்னும் பட்டத்தை வழங்கியுள்ளது.
2. 2015 ஆம் ஆண்டு இந்திய அரசு பத்மஸ்ரீ விருதை வழங்கியுள்ளது.
3. கௌகாத்தி பல்கலைக்கழகம் 'மதிப்புறு முனைவர்' பட்டம் வழங்கியுள்ளது.
A) 1&2 சரி
B) 2&3 சரி
C) 1&3 சரி
D) அனைத்தும் சரி
Answer:
D) அனைத்தும் சரி