1. காந்தியக் கவிஞர் என்று அழைக்கப்படுபவர்?
A) வெ. இராமலிங்கனார்
B) நாமக்கல் கவிஞர்
C) பாரதியார்
D) A & B
Answer:
D) A & B
2. 'சிதம்பரனாரின் பிரசங்கத்தையும், பாரதியாரின் பாட்டையும் கேட்டால் செத்த பிணம் உயிர்பெற்று எழும். புரட்சி ஓங்கும். அடிமைப்பட்ட நாடு ஐந்தே நிமிடங்களில் விடுதலை பெறும்' என்று கூறியவர் யார்?
A) காமராசர்
B) பெரியார்
C) பின்ஹே
D) அண்ணா
Answer:
C) பின்ஹே
3. விடுதலைப் போராட்டத்தின்போது காயிதே மில்லத் எந்த இயக்கத்தில் கலந்துகொண்டார்?
A) வெள்ளையனே வெளியேறு
B) உப்புக் காய்ச்சும்
C) சுதேசி
D) ஒத்துழையாமை
Answer:
D) ஒத்துழையாமை
4. கீழ்க்கண்டவற்றுள் பசும்பொன் முத்துராமலிங்க தேவரை பாராட்டியவர்களுள் தவறான இணையைத் தேர்ந்தெடு.
A) திரு வி கா – தேசியம் காத்த செம்மல்
B) தந்தை பெரியார்- சுத்தத்தியாகி
C) சிங்கத்தின் முழக்கம் -அறிஞர் அண்ணா
D) சிங்கத்தின் முழக்கம் – ராஜாஜி
Answer:
D) சிங்கத்தின் முழக்கம் – ராஜாஜி
5. கன்னிமாரா நூலகம் சென்னை 1. இந்தியாவில் வெளியிடப்படும் புத்தகங்கள், நாளிதழ்கள், பருவ இதழ்கள் ஆகியவற்றின் ஒரு படி இங்கு பாதுகாக்கப்படுகிறது. 2. இந்நூலகம் தமிழ்நாட்டின் மைய நூலகமாகும். கிபி 1896 இல் தொடங்கப்பட்டது. 3. இந்நூலகத்தின் மூன்றாம் தளத்தில் மறைமலை அடிகள் நூலகமும் செயல்பட்டு வருகின்றது.
A) 1&2 சரி
B) 2&3 சரி
C) 1&3 சரி
D) அனைத்தும் சரி
Answer:
D) அனைத்தும் சரி
6. பொருத்துக. a. தொல்காப்பியம் - 1. நடுகல் வணக்கம் b. ஓவியக்கலை - 2. ஓவியமாக்கள் c. ஓவியக் கலைஞர் - 3. வித்தக வினைஞன் d. ஓவியக் கலைஞர் குழு - 4. படாம்
A) 1432
B) 4321
C) 2341
D) 1234
Answer:
A) 1432
7. முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டுள்ள இடம்?
A) ஆதிச்சநல்லூர், தூத்துக்குடி
B) அரிக்கமேடு, பாண்டிச்சேரி
C) ஆதிச்சநல்லூர் ,திருநெல்வேலி
D) கீழடி, சிவகங்கை
Answer:
A) ஆதிச்சநல்லூர், தூத்துக்குடி
8. வேட்கை என்னும் சொல்லில் ஐகாரக் குறுக்கம் பெறும் மாத்திரை அளவு என்ன?
- A) அரை
- B) ஒன்று
- C) ஒன்றரை
- D) இரண்டு
Answer:
B) ஒன்று
9. கத்தி யின்றி ரத்த மின்றி யுத்த மொன்று வருகுது சத்தி யத்தின் நித்தி யத்தை நம்பும் யாரும் சேருவீர்! என்ற பாடல் வரிகள் இடம்பெற்ற நூல்?
A) நாமக்கல் கவிஞர்
B) காந்தியக்கவிஞர்
C) வெ. இராமலிங்கனார்
D) அனைத்தும் சரி
Answer:
D) அனைத்தும் சரி
10. பொருந்தாத இணையைத் தேர்ந்தெடுக.
A) பாரதிதாசன் –பிசிராந்தையார்
B) மகேந்திரவர்மன் –தட்சிணசித்திரம்
C) கழனியூரன் – தாத்தா பாட்டி சொன்ன கதைகள்
D) திருத்தக்கத்தேவர் – குறிஞ்சித்திட்டு
Answer:
D) திருத்தக்கத்தேவர் – குறிஞ்சித்திட்டு