1. ‘இந்தியாவின் வனமகன்’ என்று அழைக்கப்படுபவர் யார்?
A) ஜிட்டுகலிட்டா
B) ஜாதவ்பயேங்
C) ஜாதுநாத்
D) சலீம் அலி
Answer:
B) ஜாதவ்பயேங்
2. கீழ்க்கண்டவற்றுள் மகரக் குறுக்கம் இடம்பெறாத சொல் எது?
A) போன்ம்
B) மருண்ம்
C) பழம் விழுந்தது
D) பணம் கிடைத்தது
Answer:
D) பணம் கிடைத்தது
3. பொருத்துக. a. உவமை - 1. Parable b. காடு - 2. Jungle c. வனவியல் - 3. Forestry d. பல்லுயிர் மண்டலம் - 4. Bio Diversity
A) 1234
B) 2341
C) 3241
D) 4321
Answer:
A) 1234
4. தேன்மழை என்ற நூல் எந்த பாவகையைச் சார்ந்தது?
A) கலிப்பா
B) கிளிக்கண்ணி
C) கண்ணிப்பா
D) B&C
Answer:
B) கிளிக்கண்ணி
5.தன்+நெஞ்சு என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
A) தனெஞ்சு
B) தானெஞ்சு
C) தன்நெஞ்சு
D) தன்னெஞ்சு
Answer:
D) தன்னெஞ்சு
6.கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க 1.காவற்பெண்டு சங்க காலப் பெண்பாற் புலவர்களுள் ஒருவர். 2.சேர மன்னன் போரவைக் கோப்பெரு நற்கிளியின் செவிலித்தாக விளங்கியவர். 3.இவர் பாடிய ஒரே ஒரு பாடல் புறநானூற்றில் இடம் பெற்றுள்ளது. 4.நா.வானமாமலை - வீரபாண்டிய கட்டபொம்மன் கதைப்பாடல்
A) 1&2 சரி
B) 2&3 சரி
C) 1&4 சரி
D) 1,3&4 சரி
Answer:
D) 1,3&4 சரி
7. ’சுத்த தியாகி’ என்று பாராட்டியவர் யார்?
A) விவேகானந்தர்
B) பெருந்தலைவர் காமராசர்
C) பசும்பொன் முத்துராமலிங்க தேவர்
D) பெரியார்
Answer:
D) பெரியார்
8.விவேகானந்தரின் பெருமை என்னும் தலைப்பில் முத்துராமலிங்க தேவர் உரையாற்றிய இடம்?
A) ராமநாதபுரம்
B) சாயல்குடி
C) மதுரை
D) சிவகங்கை
Answer:
B) சாயல்குடி
9. கீழ்க்கண்டவற்றுள் தற்போது உரைநடை வழக்கில் இல்லாதது எது?
A) அளபெடை
B) குற்றியலுகரம்
C) குற்றியலிகரம்
D) ஆய்த குறுக்கம்
Answer:
C) குற்றியலிகரம்
10. பிரவசன கேசரி என்று அழைக்கப்பட்டவர் யார்?
A) பெரியார்
B) முத்துராமலிங்க தேவர்
C) அதிவீரமா பாண்டியர்
D) குலேச பாண்டியன்
Answer:
B) முத்துராமலிங்க தேவர்